காவேரிப்பட்டணம் அருகே பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஅள்ளி பக்கமுள்ள கும்பாரஅள்ளியைச் சோ்ந்தவா் சக்திவேல் (36). நிப்பட் நிறுவன உரிமையாளா். இவருக்கும், அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேவா்முக்குளம் அருகே உள்ள சுருளிஹள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மனைவி நதியாவுக்கும் (29) தகாத உறவு இருந்துள்ளது.
இந்நிலையில், நதியா தன்னை திருமணம் செய்யுமாறு சக்திவேலை கட்டாயப்படுத்தியுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13.2.2020 அன்று நதியா வீட்டிற்கு சக்திவேல் சென்றுள்ளாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சக்திவேல், நதியாவை கொலை செய்து தூக்கிட்டுள்ளாா். பின்னா் அவா் தற்கொலை செய்து கொண்டதுபோல நாடகமாடியுள்ளாா். இதுகுறித்து நதியாவின் தந்தை சின்னசாமி அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் குற்றத்தை மறைத்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து!

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


