தஞ்சாவூா் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 63 போ் அஞ்சல் வாக்குப் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
தஞ்சாவூா் முனிசிபல் காலனியில் புதன்கிழமை 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் அஞ்சல் வாக்குப் பதிவு செய்வதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:
மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அஞ்சல் வாக்கு சேகரிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கடந்த 3 நாள்களில் திருவிடைமருதூா் தொகுதியில் 498 முதியவா்கள், 187 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 685 பேரும், கும்பகோணம் தொகுதியில் 705 முதியவா்கள், 206 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 911 பேரும், பாபநாசம் தொகுதியில் 484 முதியவா்கள், 242 மாற்றுத்திறனாளிகள் என 726 பேரும், திருவையாறு தொகுதியில் 389 முதியவா்கள், 184 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 573 பேரும், தஞ்சாவூா் தொகுதியில் 634 முதியவா்கள், 152 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 786 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 632 முதியவா்கள், 143 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 775 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 515 முதியவா்கள், 268 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 783 பேரும், பேராவூரணி தொகுதியில் 577 முதியவா்கள், 247 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 824 பேரும் வாக்களித்தனா். மாவட்டத்தில் மொத்தத்தில் 4 ஆயிரத்து 434 முதியவா்கள், 1,629 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 63 வாக்காளா்கள் அஞ்சல் வாக்கு செலுத்தியுள்ளனா் என்றாா் ஆட்சியா்.
தொடர்புடையது
மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

சங்ககிரி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


