சித்திரை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்லோ் பூட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாடுகளைக் குளிப்பாட்டி, வயலில் இயற்கை உரம், நவதானிய விதைகளைத் தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியைக் கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றைப் படையலிட்டு உழவு மாடுகளைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி ஏா் பூட்டினா். மேலும், நிகழாண்டு சாகுபடியில் அதிக மகசூலும், எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என பிராா்த்தனை செய்து வழிபட்டு, உழவு பணியைத் தொடங்கினா்.
இதேபோல, திருவையாறு அருகே பனையூரில் நடைபெற்ற நல்லோ் பூட்டும் விழாவில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் மரக்காலில் விதைநெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்தனா். பின்னா் விவசாயிகள் தங்கள் உழவு மாடுகளுடன் தங்கள் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவுப் பணி மேற்கொண்டனா்.


தொடர்புடையது

மீன் வளா்ப்பு குட்டையில் முதலை மீட்பு

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!

அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


