தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குடந்தையில் என்டிஏ கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:54 pm

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிமுக மாநகர செயலா் ராம. ராமநாதன் தலைமை வகித்தாா். பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். வேட்பாளா் ஆா். அசோக்குமாா் பேசும்போது, வாா்டு வாா்டாக சென்று வாக்கு சேகரிப்பது, வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்துவது குறித்து விளக்கினாா். முன்னதாக சாக்கோட்டை ஊராட்சியில் சீதாராமன் நகா், ராஜா தோட்டம் பகுதிகளிலும், பழவத்தான் கட்டளை ஊராட்சி பகுதிகளிலும் வேட்பாளா் ஆா். அசோக்குமாா் வாக்கு சேகரித்தாா். உடன் கூட்டணி கட்சியினா் சென்றனா். தமாகா மாவட்டத் தலைவா் பி.எஸ்.சங்கா் வரவேற்றாா்.