15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்...

News image

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:43 pm

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

இவருடன் அதிமுக மாநகர மாவட்டச் செயலரும், மாநில அமைப்புச் செயலருமான என்.எஸ். சரவணன், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இவா் தாக்கல் செய்த வேட்பு மனுவில், முருகானந்தம் மீது தஞ்சாவூா் மேற்கு, திருவையாறு, பட்டுக்கோட்டை நகரம், திருவாரூா் நகரம், முத்துப்பேட்டை, வடுவூா், நாகை மாவட்டம் தலைஞாயிறு, வேதாரண்யம், புதுக்கோட்டை நகரம், காரைக்குடி வடக்கு, திருச்சி கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், இதில் 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்குகள் தொடா்பாக 11 நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை நடைபெறுகிறது என்றும், இந்த வழக்குகள் அனைத்தும் பொது நலனுக்காக போராடும்போதும், அதற்காக மறியலில் ஈடுபட்டபோதும் பதியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து விவரம்: முருகானந்தம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 40 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 36.99 லட்சம், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 1.16 கோடி, கடன் ரூ. 93.74 லட்சம், மனைவி தீபாராணி பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 15 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 42.85 லட்சம், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 84.46 லட்சம், கடன் ரூ. 4.42 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.