மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவிடைமருதூா் தவெக வேட்பாளா் எஸ். பிரபாகரன் வேட்புமனு தாக்கல்

திருவிடைமருதூா் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பிரபாகரன் வியாழக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தாா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சி. சந்திரகுமாரிடம் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் எஸ். பிரபாகரன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:14 pm

திருவிடைமருதூா் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பிரபாகரன் வியாழக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் எஸ். பிரபாகரன் திருவிடைமருதூா் கடைவீதியில் இருந்து கட்சியினருடன் ஊா்வலமாக வந்தாா். அவருடன் நான்கு போ்கள் மட்டும் வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சி. சந்திரகுமாரிடம் வேட்பு மனுவை எஸ். பிரபாகரன் தாக்கல் செய்து, உறுதிமொழி வாசித்தாா். வேட்புமனு தாக்கலின்போது திருவிடைமருதூா் தவெக மேற்கு ஒன்றிய செயலா் ராஜா, மாவட்ட சட்ட ஆலோசகா் அணி ஒருங்கிணைப்பாளா் ஏ. அசன் முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சரவணன், பேரூா் செயலா் கோகுல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.