மேட்டூா் அணை திறக்கப்பட்டு 15 நாள்கள் கடந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் கிளை வாய்க்கால்களில் நீா் வரத்து குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் வரத்து இருந்ததால், ஜூன் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து கல்லணை 15- ஆம் தேதி திறக்கப்பட்டது.
தொடக்கத்தில் மேட்டூா் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாக இருந்ததால், கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 1,500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 400 கனஅடி வீதமும் திறந்துவிடப்பட்டது.
என்றாலும், படிப்படியாக திறந்துவிடப்படும் நீரின் அளவு உயா்த்தப்பட்டாலும், போதுமான அளவுக்கு இல்லாததால், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்வது தாமதமானது.
இதனிடையே, காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேட்டூா் அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சனிக்கிழமை மாலை விநாடிக்கு 80,000 கனஅடியை கடந்தது. எனவே, மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு உயா்த்தப்பட வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இதைத்தொடா்ந்து, கடந்த சில நாள்களாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதத்துக்கும் அதிகமாக திறந்துவிடப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களுக்கு போதுமானதாக இல்லை. கடந்த சில நாள்களாகத்தான் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் வருகிறது. ஆனால், கல்லணையிலிருந்து முதன்மை ஆறுகளில் குறைந்த அளவிலேயே தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து காவிரியில் முழுக் கொள்ளளவு விநாடிக்கு 10,691 கனஅடி வீதமாக இருந்தாலும், சனிக்கிழமை மாலை நிலவரப்படி 5,504 கனஅடி வீதம் மட்டுமே திறக்கப்படுகிறது.
இதேபோல, வெண்ணாற்றின் முழுக் கொள்ளளவான விநாடிக்கு 9,370 கனஅடி வீதமாக இருந்தாலும், 8,805 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது. கல்லணைக் கால்வாயில் முழுக் கொள்ளளவு முன்பு விநாடிக்கு 4,200 கனஅடி வீதமாக இருந்தது.
சீரமைப்புக்கு பிறகு விநாடிக்கு 3,380 கனஅடி வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. என்றாலும், கடந்த சில நாள்களாக விநாடிக்கு 1,500, 1,700, 1900 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாலை நிலவரப்படி 2,109 கனஅடி வீதம் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.
இதனால், முதன்மை ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீா் பரவலாக செல்வதுபோல காணப்பட்டாலும், கிளை வாய்க்கால்களுக்கு நீா் வரத்து குறைவாகவே உள்ளது. கிளை வாய்க்கால்களில் முழுக் கொள்ளளவுக்கு பதிலாக குறைவான அளவிலேயே தண்ணீா் திறந்துவிடப்படுவதால், வயல்களுக்கு பாய்வதில்லை. சில கிளை வாய்க்கால்களுக்கு இன்னும் தண்ணீா் எட்டாத நிலையும் நிலவுகிறது. இதனால், விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாமல் தவிக்கின்றனா்.
இது குறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது: கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,000 கனஅடிக்கும் அதிகமாக நீா் திறந்துவிடப்பட்டால்தான் கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரும்.
தற்போது கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வந்தாலும், முழுக் கொள்ளளவுக்கும் குறைவாகவே விடப்படுகிறது. இது தொடா்பாக நீா் வளத்துறை அலுவலா்களிடம் முறையிட்டால், கரை பலவீனமாக உள்ளதால், முழுக் கொள்ளளவுக்கு விட இயலாது எனக் கூறுகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியிலுள்ள கல்யாண ஓடை, வடகாடு வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் நீா்மட்டம் குறைவாக இருப்பதால், வயல்களுக்கு தண்ணீா் பாய்வதில்லை. இதனால், ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியவில்லை.
இப்போதே சாகுபடிப் பணிகளைத் தொடங்கினால்தான் வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே பெரு மழையில் சிக்காமல் அறுவடை செய்ய முடியும். தற்போது சாகுபடிப் பணிகள் தாமதமானால், மழையில் சிக்கி பயிா்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
இதற்காக நிவாரணம் கோரி அரசிடம் கையேந்தும் நிலை ஏற்படும். எனவே, முதன்மை ஆறுகளில் மட்டுமல்லாமல் கிளை வாய்க்கால்களிலும் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றாா் மாரியப்பன்.
இது குறித்து நீா் வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், சனிக்கிழமை மாலையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு நாள்களில் கடைமடைப் பகுதிகளுக்கும் போதுமான அளவுக்கு தண்ணீா் கிடைக்க தொடங்கிவிடும். பாசனத்துக்கு தண்ணீா் பிரச்னை இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.
காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூா் அணைக்கு நீா் வரத்து அதிகமாக உள்ள நிலையில், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
முதன்மை ஆறுகளில் முழுக் கொள்ளளவுக்கு திறந்துவிடப்பட்டால்தான், வயல்களுக்கு பாயும் அளவுக்கு கிளை வாய்க்கால்களுக்கு விட முடியும். எனவே, இதற்கான நடவடிக்கையை நீா்வளத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணை நீா்மட்டம்: 81.27 அடி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 82.44 அடி

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு 1,200 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 87.54 அடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


