தஞ்சாவூர், செப். 29: குடிசை வீடுகள், விவசாயத்துக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மின்சாரம்
முறையாகப் பயன்படுத்தப்படாததால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ஏழை, எளிய மக்கள் மேம்பாடு அடையவும், விவசாயத்தை மேம்படுத்தவும், நெசவுத் தொழில்
(மானியத்துடன்) உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேம்படுத்தவும் வரைமுறைக்குள்பட்டு அரசு
இலவசமாக மின் இணைப்பு அளிக்கிறது.
இலவச இணைப்பு பெற்றவர்கள் விதிகளை மீறுவதால் அரசுக்கு அதிகளவு வருவாய் இழப்பு
ஏற்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் ஒற்றை பல்பு
(40 வார்ட்ஸ்) மின் திட்டத்தின் கீழ், 61,869 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் ஒவ்வொரு குடிசை வீட்டிலும் 40 வார்ட்ஸ் பல்பு (ஒன்று) மட்டுமே பயன்படுத்த
வேண்டும். ஆனால், 95 சத வீடுகளில் டியூப் லைட், மின் விசிறி, கிரைண்டர், டேப் ரெக்கார்டர்,
தொலைக்காட்சி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
மேலும், தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இலவச
மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால், ஒற்றை பல்பு இலவச மின் திட்டம் மூலம் வழங்கப்படும்
இணைப்புகளில் எந்தக் குடிசைகளிலும் ஒரு பல்பு மட்டும் எரிக்கப்படுவதில்லை.
எனவே, இத் திட்டத்தில் பயனடையும் குடிசை வீடுகளில் பயன்படுத்தும் மின் அளவைக் கணக்கிடும்
வகையில் அரசே மீட்டரை பொருத்தி அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில், இலவச யூனிட் போக
எஞ்சிய யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத்துக்காக 36,458 இலவச மின் இணைப்புகளும், சுயநிதித்
திட்டத்தின் கீழ் 23,389 மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மின் இணைப்பு
கோரும் போது, பயன்படுத்தப்போகும் மின் மோட்டாரின் குதிரைத் திறனை விண்ணப்பத்தில்
குறிப்பிட்டு அளிப்பர். ஆனால், மின் இணைப்பு பெற்ற பிறகு, அவர்களில் 99 சதத்தினர் விண்ணப்பத்தில்
குறிப்பிட்டதைவிட அதிக அளவு குதிரைத் திறன் கொண்ட மோட்டார்களையே பயன்படுத்துகின்றனர்.
இதனால் மின் அழுத்தம் தாங்காமல், கிராமப் பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி அரசுக்கு
இழப்பை ஏற்படுத்துகின்றன.
இதுதொடர்பாக விவசாயிகளிடமும் கேள்வி எழுப்ப முடியாத நிலையில் உள்ளதாக மின் வாரிய
அலுவலர்கள் கூறுகின்றனர்.
எனவே, மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அரசு உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் வாரிய ஊழியர்களுக்கு இந்த பிரச்னையை கையாள தகுந்த ஆலோசனை கூறுவதுடன், தகுந்த
பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதன்மூலம், மின்சாரத்தால் அரசுக்கு
ஏற்படும் இழப்பைத் தடுக்கலாம். எனவே, மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் 10 முதல் 15 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி வருகின்றன
என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

