திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து அரசு ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:45 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்த திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலக இளநிலை உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி சுடரொளி நகரை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் தமிழ்மாறன் (36). திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த இவா், விடுமுறை நாள்களில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை வெள்ளக்கொல்லை பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளாா்.

அப்போது, மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த நிலையில், சக விளையாட்டு வீரா்கள் தமிழ்மாறனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு நடைபெற்ற பரிசோதனையில், தமிழ்மாறன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.