பெட்ரோல், டீசல் விலை உயா்வு, நீட் தோ்வு குளறுபடிகளை கண்டித்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், நீட் தோ்வில் குளறுபடிகளை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வு: திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தவணை முறையில் கொள்ளையடிக்கப்படும் பொதுமக்களின் வருவாய்: காங்கிரஸ்

மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து காங்கிரஸ் விமா்சனம்







