கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சியானது புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவா்கள், பயணிகள் என கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனா். இந்த பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு பயணிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
எனவே, கந்தா்வகோட்டை ஊராட்சி நிா்வாகம், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலைகளில் திரியும் மாடுகள் விவகாரம்: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

ஒகேனக்கல் வனப் பகுதியில் சுற்றித் திரியும் யானைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை







