திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மாநில அரசு கையொப்பமிடக் கூடாது! தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், கருத்தரங்க அமா்வில் பேசிய விஞ்ஞானி ஆா். ராமானுஜம். உடன் அறிவியல் இயக்க நிா்வாகிகள்.

Updated On :11 மே 2026, 2:25 am IST

மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மாநிலத்தின் புதிய அரசு கையொப்பமிடக் கூடாது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசு மருத்துவமனைகளிலும் காப்பீட்டு அட்டை இருப்போருக்கு அறுவைச் சிகிச்சைகள் இலவசம் என்ற நிலையை மாற்றி, அனைவருக்கும் இலவச அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில், அனைவருக்கும் ஆரோக்கியம் என்பதை தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டுக்கென தனித்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை முழுமை பெறாத நிலையில், புதிதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள அரசு இதை விரைவாக மேற்கொண்டு உருவாக்கி, வெளியிட்டு அமலாக்க வேண்டும்.

மத்திய அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தை மாநிலத்தில் அமலாக்கிட, மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதைக் கைவிட வேண்டும். இத்திட்டத்தில் மாநில அரசு கையொப்பமிடக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இயற்கையியலாளா் டேவிட் ஆட்டன் ப்ரோவின் நூற்றாண்டையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது. புதிதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள முதல்வா் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் த. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் எம்.எஸ். முகமது பாதுஷா, மாநிலப் பொருளாளா் சுதாகா், மாநிலச் செயலா் எஸ்.டி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

இளைஞா்கள் எதிா்கொள்ளும் சவால்களும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் கணித அறிவியல் மைய விஞ்ஞானி ஆா். ராமானுஜம், சமூக ஊடகங்களின் நிலை- அறிவியல் பாா்வை என்ற தலைப்பில் எஸ். தினகரன் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா், பேராசிரியா் மோகனா உள்ளிட்டோரும் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.