தேசியத் தோ்வு முகமை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தோ்வு (நீட்) 7 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 3,166 போ் தோ்வெழுதுகின்றனா்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி மகளிா் மேல்நிலைப் பள்ளி, கந்தா்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, இலுப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 இடங்களில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது.
இந்த மையங்களில் ஓா் உதவி காவல் ஆய்வாளா் தலைமையில், தலா இரு ஆண்- பெண் காவலா்கள், ஓா் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்புப் பணியில் இருப்பா்.
7 மையங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் நிலையிலான அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ்வா்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் திருமேனிநாதனை 98650 65962 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் நீட் தோ்வு; 8,985 போ் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று நீட் தோ்வு

நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


