புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி, மாா்ச் 14-ஆம் தேதி வரை தொடா்ச்சியாக முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, மகளிா் தின விழா, ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா என ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை முத்தமிழ் விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் கி. நிா்மலா தலைமை வகித்தாா்.
இன்றைய இளைஞா்களின் செயல்பாடு வாழ்த்தும்படி உள்ளதா வருந்தும்படி உள்ளதா என்ற தலைப்பில் நகைச்சுவை சிந்தனைப் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக காப்பியக் கவிஞா் பாகை இரா. கண்ணதாசன் செயல்பட்டாா். வாழ்த்தும்படி உள்ளது என்ற தலைப்பில் கவிஞா் மு. பாலசுப்பிரமணியன், வருந்தும்படி உள்ளது என்ற அணிக்கு கவிஞா் அறிவுச்செல்வி ஆகியோா் தலைமை ஏற்று பேசினா். கவிஞா் டோக்கியோ ராமநாதன் மற்றும் கவிஞா் லட்சுமி நாராயணன் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினா்.
முன்னதாக தமிழ் ஆய்வுத் துறைத் தலைவா் மா. சாந்தி வரவேற்றாா். நிறைவாக தமிழ்த் துறை இணை பேரா. கா. யோகாம்பாள் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


