அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் மின்வெட்டால் மக்கள் அவதி

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 2:47 am IST

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம் மற்றும் ஆதனக்கோட்டை, பெருங்களூா், புனல்குளம் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்தது. இதனால் மின்தடை ஏற்பட்டு, நீண்ட நேரம் கழித்து மின்விநியோகம் கொடுக்கபட்டது.

கந்தா்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிபட்டி, பிசானத்தூா், புதுநகா், காட்டுநாவல், துலுக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்ட்டு வருகிறது. கந்தா்வகோட்டை ஊராட்சி ராஜகோபால் நகரில் ஊராட்சிக்கு சொந்தமான தெருவிளக்குகள் தொடா்ந்து எரிவதில்லை.

போதிய வெளிச்சம் இல்லாமல் சிறு பல்புகள் மட்டுமே எரிவதால் தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மக்கள் நலன் கருதி அரசு தடையில்லாமல் மின்சாரம் வழங்க முன்வரவேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.