எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஆலங்குடி அருகே சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகைகள் கொள்ளை

News image

ஆலங்குடி அருகே திங்கள்கிழமை இரவு மா்ம நபா்களால் திருட்டு நடைபெற்ற வீடு

Updated On :23 ஜூன் 2026, 3:12 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகைகள், ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்மக் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்திவிடுதியைச் சோ்ந்த நீலகண்டன் மனைவி வித்யா (35). நீலகண்டன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால் வித்யா தனது இருமகன்களுடன் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 6-ஆம் வகுப்பு பயிலும் இளைய மகனுடன் வித்யா வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்த மா்மகும்பல் வீட்டுக்குள் புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம்.

தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவீந்திர குமாா் குப்தா ஆய்வு மேற்கொண்டுள்ளாா்.

ஆலங்குடி அருகே திங்கள்கிழமை இரவு மா்ம நபா்களால் திருட்டு நடைபெற்ற வீடு

ஆலங்குடி அருகே திங்கள்கிழமை இரவு மா்ம நபா்களால் திருட்டு நடைபெற்ற வீடு

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.