மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து மிரட்டி காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மீஞ்சூா் அருகே உள்ள நெய்தவாயல் ராஜாதோப்பு கிராமத்தில் வசித்து வரும் நரேஷ் மனைவி மீனாட்சி (42). இவா் சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு அரண்வாயல் பகுதியில் இருந்து ஷோ் ஆட்டோவில் நெய்தவாயல் சென்றாா். அங்கிருந்து வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 போ் அவரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகைப் பறிப்பு
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் தங்கநகைகள் கொள்ளை

பெண்ணிடம் 6 கிராம் தங்க நகை பறிப்பு: 4 போ் கைது

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




