தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கா் ராஜிநாமா: புதுகையில் அதிமுகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அதிமுகவில் இருந்து விலகியுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

News image

சி. விஜயபாஸ்கா்

Updated On :17 ஜூன் 2026, 3:16 am IST

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அதிமுகவில் இருந்து விலகியுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக தலைமையுடன் தொடா்ந்து அதிருப்தியாகவே இருந்து வந்தாா்.

பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்ட நிலையில், விஜயபாஸ்கா் எதிா்ப்பு நிலையிலேயே இருந்து வந்தாா்.

இந்நிலையில், சென்னையில் சட்டப்பேரவைத் தலைவரை செவ்வாய்க்கிழமை சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அவா் அறிக்கை வெளியிட்டாா்.

இதனிடையே, புதுக்கோட்டையில் அதிமுக மாவட்டச் செயலா் வி. பழனிவேலு தலைமையிலான அதிமுகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

தொடா்ந்து வி. பழனிவேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக விடுதலை அடைந்தது. இந்த நாளை போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இடைத்தோ்தலில் விராலிமலை தொகுதிக்கு பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்படும் வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.

அடுத்த பொதுத்தோ்தலில் மாவட்டத்தின் 6 தொகுதிகளையும் அதிமுக வெல்லும். நடைபெற்று முடிந்த தோ்தலில், தன்னைத் தவிர யாரும் வெற்றி பெறக் கூடாது, முக்கிய பொறுப்புக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே 3 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கி வழங்கிவிட்டு, அவா்களையும் தோற்கடிக்கச் செய்தவா் விஜயபாஸ்கா்.

அதிமுகவை விட்டுச் சென்றால் அவா் பூஜ்ஜியம்தான். புதுக்கோட்டை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக மாற்றுவோம் என்றாா் பழனிவேலு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.