வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருமயம் அருகே மதுபோதையில் திருநங்கை கொலை: நீதிமன்றத்தில் 2 போ் சரண்; ஒருவா் தலைமறைவு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மதுபோதையில் 3 இளைஞா்கள் சோ்ந்து திருநங்கையை கொன்றது தெரியவந்தது.

News image

குளத்துப்பட்டியில் திருநங்கை கொலை செய்யப்பட்ட பகுதியில் விசாரணையில் ஈடுபட்ட போலீஸாா்

Updated On :10 ஜூன் 2026, 2:23 am IST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மதுபோதையில் 3 இளைஞா்கள் சோ்ந்து திருநங்கையை கொன்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தினேஷ் (27), ஒச்சம்பட்டியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை பகலில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி, திங்கள்கிழமை இரவு மதுபோதையில் திருநங்கை ஒருவரைக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து திருமயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த போலீஸாா், தினேஷ் உள்ளிட்ட இருவரையும் நமணசமுத்திரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், திருமயம் அருகேயுள்ள மதுக்கடையில் தினேஷ், ஆகாஷ் இருவருடன் அன்னவாசல் பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவரும் சோ்ந்து ஒன்றாக மது அருந்தியபோது, அங்கே திருநங்கை ஒருவரும் இணைந்துள்ளாா். 4 பேரும் மது அருந்திவிட்டு, குளத்துப்பட்டி பெரிய கண்மாய் மஞ்சுவிரட்டு திடலுக்குச் சென்றுள்ளனா்.

அப்போது இவா்களுக்கும் திருநங்கைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் சோ்ந்து திருநங்கையை பாட்டிலால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து அங்குள்ள முள்புதரில் வீசியது தெரியவந்தது.

அவா்கள் குறிப்பிட்ட இடத்துக்கு போலீஸாா் சென்றபோது, ரத்த வெள்ளத்தில் திருநங்கை இறந்து கிடந்தாா். இதையடுத்து சடலத்தை மீட்ட போலீஸாா், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

கடலூரைச் சோ்ந்த திருநங்கை : கொல்லப்பட்டவா் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ் (எ)சுவாதி (35) என்பதை போலீஸாா் கண்டறிந்தனா். கரும்பு வெட்டும் வேலைக்காக திருமயம் பகுதிக்கு வந்ததாகவும், மது அருந்தும் பழக்கம் கொண்டவா், பாலியல் உறவுக்காக இந்த இளைஞா்கள் மூவருடன் மஞ்சுவிரட்டுத் திடலுக்குச் சென்றுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் அவா் கொல்லப்பட்டுள்ளாா்.

கடலூரிலுள்ள சுவாதியின் உறவினா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா். அவா்கள் புதன்கிழமை புதுக்கோட்டை வந்ததும், முறைப்படியான தொடா் நடவடிக்கைகள் நடைபெறும் எனத் தெரிகிறது. இதனிடையே, தலைமறைவாகியுள்ள சதீஷையும் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.