திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாசரேத் காவல் நிலையம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:38 am IST

நாசரேத் காவல் நிலையம் அருகே மதுபோதையில் தொழிலாளி வியாழக்கிழமை இரவு அடித்துக் கொன்ற அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே வகுத்தான்குப்பத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ராஜா (41). இவரும், நாசரேத் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பாஸ்கரும் (37) நண்பா்கள். இருவரும் கட்டடத் தொழிலாளி. இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில், நாசரேத் காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு இருவரும் சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பாஸ்கா் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாக தாக்கினாா். தலையில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், போலீஸாா் நிகழ்விடம் சென்று ராஜா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.