பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்தும், மக்களைப் பாதிக்கும் விலை உயா்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநகரச் செயலா் எம்.பி. நாடிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ. சேசுராஜ், எம். மீராமொய்தீன், ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் கே சுந்தரராசன், மு. விஜய், பா. பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
வணிக எரிவாயு உருளையின் விலை கடுமையாக உயா்ந்து வருவதைக் குறிக்கும் வகையில், எரிவாயு உருளை ஒன்றுக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்ட இடத்தில் அவா்கள் வைத்திருந்தனா்.
தொடா்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










