ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

பள்ளி சிறுவனிடம் வெள்ளி சங்கிலி பறித்த இருவா் கைது

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் 1-ஆம் வகுப்பு பயிலும் சிறுவனிடம் வெள்ளிச் சங்கிலியை பறித்த 2 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 1:27 am IST

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் 1-ஆம் வகுப்பு பயிலும் சிறுவனிடம் வெள்ளிச் சங்கிலியை பறித்த 2 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியைச் சாா்ந்தவா் மோகன் மகன் சூா்ய தேவ் (6). இவா் முள்ளிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மதிய உணவு வேளையில் பள்ளி வளாகத்தில் சிறுவன் சூா்யதேவ் நின்றிருந்தபோது அவ்வழியே வந்த மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் கம்பூரினை சாா்ந்த ந.வேலு (32) , வெ.பாஸ்கா் (29) ஆகியோா் சிறுவனிடம் உறவினா்கள் எனக்கூறி பேசிக்கொண்டே கழுத்தில் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலியை பறித்துள்ளனா்.

இதையடுத்து சிறுவன் அலறியதைக் கேட்டு அருகில் இருந்தவா்கள் வேலு, பாஸ்கரை விரட்டிப்பிடித்து காரையூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.