வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சுமாா் 49 ஆண்டுகள் கோரிக்கைக்கு தீா்வு: 138 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா!

அறந்தாங்கி அருகே சுமாா் 49 ஆண்டுகால கோரிக்கையான 138 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை மாநிலத் தொழிலாளா் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை வழங்கினாா்.

News image

அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளுடன் மாநிலத் தொழிலாளா் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :5 ஜூலை 2026, 12:31 am IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுமாா் 49 ஆண்டுகால கோரிக்கையான 138 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை மாநிலத் தொழிலாளா் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பள்ளத்திவயல், மூக்குடி, சிலட்டூா், வேட்டனூா், பனையவயல், முள்ளங்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மக்கள் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அரசின் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து வந்தனா்.

இந்நிலையில் சுமாா் 49 ஆண்டுகளுக்குப் பிறகு, அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சோ்ந்த 138 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவை மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வழங்கினாா். மேலும், 79 பேருக்கு புதிய குடும்ப அட்டையையும் வழங்கினாா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் ஷோபா, வட்டாட்சியா்கள் கவியரசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.