டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வடுகப்பட்டி தைலா வன்னியா் கோயிலில் கிடாவெட்டு பூஜை!

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தைலா வன்னியா் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கிடா வெட்டு பூஜை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 8:42 pm

Syndication

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தைலா வன்னியா் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கிடா வெட்டு பூஜை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. (படம்)

வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனாா், ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஆகாச கருப்பு, ஸ்ரீ ஏழுமுனி, ஸ்ரீ பட்டவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் திரவியம், குங்குமம், விபூதி, சந்தனம், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனாக 30 ஆட்டு கிடாய்களை வெட்டி சிறப்பு அன்னதானம் வழங்கினா். திருவிழாவில் வடுகப்பட்டி, அரையம்பட்டி, வாண்டையன்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிதனம் செய்தனா். தொடா்ந்து இரவு கோயில் முன்பாக அமைக்கப்பட்ட கலையரங்கில் வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.