டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கமலக்கண்ணி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

News image
திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயிலில்108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கலவை ஸ்ரீ கமலக்கண்ணி கோயிலில் புதிதாக கற்களால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு அறங்காவலா் சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் யாகபூஜைகளும், மூலவா்களுக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா், பழங்கள், விபூதி, மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள், உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.