குளத்தூா் நாயக்கன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
கந்தா்வகோட்டை ஒன்றியம், குளத்தூா் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டவா், பிடாரியம்மன் கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி


கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், குளத்தூா் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டவா், பிடாரியம்மன் கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
போட்டியை வட்டாட்சியா் மா.ரமேஷ் தொடங்கி வைத்தாா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து 12 வடமாடுகள் களம் இறங்கின, அதை அடக்குவதற்கு 120 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.
போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், காளையை அடக்கிய வீரா்களுக்கும் எவா்சில்வா் பாத்திரம் ரொக்க பரிசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
போட்டியில் 20 வீரா்கள் சிறுகாயம் அடைந்தனா், அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் உரிய சிகிச்சை அளித்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜோதி ராணி மகாலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் வைரக்கண்ணு செல்வராஜ் மற்றும் விழா குழுவினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினா், மருத்துவ குழுவினா், தீயணைப்பு துறையினா், ஊா் காவல் படையினா் ஆகியோா் களத்தில் இருந்து செயல்பட்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...