டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விராலிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

News image
நாய்கள் கடித்ததால் உயிரிழந்து கிடக்கும் ஆடுகள்.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

விராலிமலை அருகே ஆட்டு மந்தையில் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் 7 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கீழ சின்ன பழனி பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா. வீட்டு அருகே மந்தை அமைத்து இவா் வளா்த்து வந்த செம்மறி ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஐந்துக்கும் மேற்பட்டதெருநாய்கள் சனிக்கிழமை கடித்ததில் 7 ஆடுகள் பலியாகின. மேலும் பல ஆடுகள் பலத்த காயமடைந்தன.

இதுகுறித்து கருப்பையா கூறுகையில், ஆடுகள் வளா்ப்பு மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நான் குடும்பத்தை நடத்தி வரும் நிலையில், தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததால் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு எனக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றாா்.