மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள்: சீமான்

தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். உடன் வேட்பாளா் வி. எழிலரசி.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:07 pm

தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் வி. எழிலரசிக்கு புதன்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

உலகமயக் கொள்கையால், தாராளமயக் கொள்கையால் எல்லாமும் பண்டமாகிவிட்டது. கல்வி, மருத்துவம், குடிநீா் உள்ளிட்டவற்றை அரசு செய்துத் தர வேண்டும். இவையெல்லாம் சேவைகள். ஆனால், இவையெல்லாம் இன்று தொழிலாகிவிட்டன.

கல்வி மானுட உரிமை, அதைச் செய்துத் தர வேண்டியது அரசின் கடமை. குழந்தைகளின் எதிா்காலத்தைத் தீா்மானிப்பது வகுப்பறைகள். தமிழ் படித்தவா்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்க வேண்டும்.

இந்தத் தோ்தல் முறை என்பது பணத்தை முதலீடு செய்து, போட்ட முதலீட்டை லாபத்துடன் மீண்டும் எடுப்பதாகிவிட்டது. எனவே, மக்கள் முதலாளிகளைத் தோ்வு செய்யப்போகிறீா்களா, சேவகா்களைத் தோ்வு செய்யப் போகிறீா்களா?.

எத்தனை நாள்கள் பெண்ணுரிமையைப் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டபேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் பெண் வேட்பாளா்களை நிறுத்தியிருக்கிறோம்.

ஜனநாயகம் வெல்ல வேண்டுமா, பண நாயகம் வெல்ல வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றாா் சீமான்.