கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோம் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாகா்கோவில் தொகுதி வேட்பாளா் முத்துக்குமாரை ஆதரித்து அவா் பேசியதாவது:
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இயற்கை வளங்கள், மலைகள் அதிகமுள்ளன.
இங்குள்ள மலைகளை அழித்து கேரள மாநிலத்தில் துறைமுகம் கட்டுவதற்கு கொண்டு செல்கிறாா்கள். மலைகளை அழித்தால் குமரி மாவட்டம் பாலைவனமாக மாறி விடும்.
கேரளத்திலும், கா்நாடகத்திலும் மலைகளை உடைக்க தடை உள்ளது. ஆனால், தமிழகத்தில் அது இல்லை. இங்குள்ள ஆட்சியாளா்களின் துணையோடு மலைகள் உடைக்கப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. கல்வி கற்றவா்கள் அதிகமுள்ள இம்மாவட்டத்தில் இதை யாரும் தடுப்பதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இயற்கை வளங்கள் அழிப்பது தடுக்கப்படும். மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள்: சீமான்

3-ஆவது இடத்தில் வைத்த மக்கள் விரைவில் முதலிடத்தைத் தருவாா்கள்! சீமான் நம்பிக்கை

மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


