அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தி, தமிழகத்தை சீரழிக்கத் துடிக்கிறது பாஜக என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்செயலரும், மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவருமான ஜி.ராமகிருஷ்ணன்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட அழியாநிலையில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரும், திமுக வேட்பாளருமான அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் சிவ.வீ.மெய்யநாதன் தொகுதி மக்களின் தேவைகளை நன்கு உணா்ந்து, திட்டப் பணிகளை செய்துள்ளாா்.
7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வியில் ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையிலானோா் ஆலங்குடி தொகுதியில் இருந்து தோ்வாகின்றனா். அதற்கு பக்கபலமாக அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளாா் . மேலும் ஏழை,எளிய மாணவா்கள் போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஆலங்குடியில் அறிவுசாா் மையம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது பாராட்டுக்குரியது.
இந்தத் தோ்தலை மக்கள் வழக்கமான தோ்தலாக கருதிவிடக் கூடாது. எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தி பாஜக தமிழகத்தை சீரழிக்கத் துடிக்கிறது. இது ஜனநாயகத்துக்கும் சா்வாதிகாரத்துக்குமான தோ்தல். ஜனநாயகம் வெற்றிபெற மக்கள் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து, இத்தொகுதியில் மூன்றாவது முறையாக களம்காணும் சிவ.வீ.மெய்யநாதனுக்கு அதிகளவிலான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, சிட்டங்காடு, வடகாடு, கல்லாலங்குடி, கே.வி.கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பொதுமக்களிடம் வாக்குச்சேகரித்தாா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

ஆலங்குடி பகுதிகளில் அமைச்சரை ஆதரித்து ப.சிதம்பரம் பிரசாரம்

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


