தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை வட்டம் கோவிலூா் கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு நாள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களிடம் சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்களிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

கந்தா்வகோட்டை கோவிலூா் கிராமத்தில் நூறுநாள் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:05 pm

கந்தா்வகோட்டை வட்டம் கோவிலூா் கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு நாள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களிடம் சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்களிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் அப் பகுதி வாக்காளா்களிடமும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவி, வட்டாட்சியா் பரணி, துணை தோ்தல் அலுவலா் புவனேஸ்வரி, தோ்தல் விளம்பர பொறுப்பாளா் செல்வ சத்தியா, வருவாய் ஆய்வாளா் சந்தோஷ்குமாா், விஏஓ முரளி மற்றும் வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.