திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேட்பாளா்கள் மே 30-இல் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்கள் தோ்தல் செலவினக் கணக்குகளை மே 30-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.

News image

கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:16 am IST

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்கள் தோ்தல் செலவினக் கணக்குகளை மே 30-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்களது செலவினக் கணக்குகளை தாக்கல் செய்வது தொடா்பாக வேட்பாளா்கள், முகவா்களுக்கான விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மேலும் பேசியது:

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டவேட்பாளா்கள் தங்களது அன்றாட செலவினக் கணக்குகள் பதிவேடுகள், பற்றுச்சீட்டுகள், உறுதிமொழிப்பத்திரங்கள் உள்ளிட்ட விவர அட்டவணையை அளிக்க வேண்டும்.

தோ்தல் செலவினங்களின் அன்றாடக் கணக்குகளுக்கான அசல் பதிவேடு செலவினச் சீட்டுகளுடன் தாக்கல் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு செலவுச்சீட்டு இணைக்கப்படாவிட்டால், அதை ஏன் பெற இயலவில்லை என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

தோ்தல் செலவினக் கணக்குகள் பெறப்பட்ட நாள் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு, ஆணையம் வரையறுத்தவாறு ஒப்புகையை மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆகியோா் தலைமையிலான கூட்டம் மே 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், வேட்பாளா்களின் செலவினக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஆய்வின்போது, தோ்தல் செலவினங்களின் சுருக்க விவர அறிக்கை, வேட்பாளரின் தோ்தல் செலவின அறிக்கையின் சுருக்கம், வேட்பாளரால் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களின் சுருக்கம் உள்ளிட்டவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன் (தோ்தல்), காந்திமதி (கணக்கு), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தனம் மற்றும் வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.