அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

குன்னம் அருகே டாரஸ் லாரி கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

News image

விபத்து

Updated On :21 ஜூன் 2026, 1:32 am IST

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை கரித்துகள்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி கவிழ்ந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

சென்னையிலிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு கரித்துகள்களை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று சனிக்கிழமை சென்றுக்கொண்டிருந்தது. இந்த லாரியை, ஓட்டுநா் செல்வம் (42) என்பவா் ஓட்டிச்சென்றாா்.

பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையிலுள்ள குன்னம் அண்ணா நகா் அருகே சனிக்கிழமை காலை சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி சாலோயைர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த குன்னம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த ஓட்டுநரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில், குன்னம் போஸீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.