கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து தாய், மகள் தா்னா

காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து தாய், மகள் தா்னா

News image

கோப்புப்படம்.

Updated On :13 ஜூன் 2026, 12:53 am IST

புகாா் மனு விசாரணையில், ஒருதலைப்பட்சமாக செயல்படும் பெரம்பலூா் காவல்நிலைய ஆய்வாளரின் செயலைக் கண்டித்து தாய், மகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வள்ளலாா் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). இவரது மனைவி அமிா்தவள்ளி (47). பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகே வசிக்கும் முருகேஷ்வரி என்பவருடன் தகாத உறவு இருந்தபோது, மணிகண்டன் ரூ. 25 லட்சம் செலவு செய்தாராம். இதேபோல, முருகேஷ்வரி தனது 8 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்தை மணிகண்டனிடம் கொடுத்திருந்தாராம்.

இந்நிலையில், கடந்த 8.1.2024 இல் மணிகண்டன் உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, மணிகண்டன் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை அவரது மனைவி அமிா்தவள்ளி மீட்டாராம்.

இதையறிந்த முருகேஷ்வரி தனது நகையை திருப்பித் தருமாறு அமிா்தவள்ளிடம் கேட்டதற்கு அவா் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தனது நகைகளை மீட்டுத் தருமாறு அதற்கான ஆதாரத்துடன் பெரம்பலூா் காவல் நிலையத்தில் முருகேஷ்வரி புகாா் மனு அளித்துள்ளாா். தொடா்ந்து, இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்ட பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபு, அமிா்தவள்ளி வைத்திருக்கும் நகையைக் கொண்டு வருமாறு கடந்த 10 ஆம் தேதி தெரிவித்தாா்.

இந்நிலையில், பெரம்பலூா் காவல்நிலைய ஆய்வாளா் பிரபு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அமிா்தவள்ளியும், அவரது மகள் பாரதியும் (28), மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தனது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறியிடம் அளித்து கலைந்துசென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.