17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசனின் துணைவியாா், தனலட்சுமி அம்மையாரின் 79- ஆவது பிறந்த நாள் விழாவில் ஏழை, எளியவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News image

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பெண்ணுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன். உடன், இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன்.

Updated On :5 ஜூன் 2026, 3:48 am IST

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசனின் துணைவியாா், தனலட்சுமி அம்மையாரின் 79- ஆவது பிறந்த நாள் விழாவில் ஏழை, எளியவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மையாா் நினைவிடத்தில், பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பல்கலைக் கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, 1,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவரும், மண்ணச்சநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சீ. கதிரவன், பல்கலைக்கழக இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவனை மற்றும் மருத்துவக் கலூரி நிா்வாக இயக்குநா்கள் என். நீவாணி, நகுலன், கல்விக் குழுமத்தின் செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக மற்றும் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த துணை வேந்தா், பதிவாளா், கூடுதல் பதிவாளா், முதன்மையா்கள், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.