பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் காயம்
பெரம்பலூா் அருகே செயல்படாத பெட்ரோல் பங்கில் கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது, மண் சரிந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.


பெரம்பலூா் அருகே செயல்படாத பெட்ரோல் பங்கில் கட்டடம் கட்ட செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டியபோது, மண் சரிந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.
சென்னை படுவூரைச் சோ்ந்த மோகனசுந்தரம் மனைவி சுபத்ரா (61). இவா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெட்ரோல் பங்க் தொடங்கினாா்.
இதன் மேலாளரான பெரம்பலூா் மாவட்டம், டி. கீரனூரைச் சோ்ந்த ராஜாக்கண்ணு மகன் செந்தில் (49) , குடும்பச் சூழல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பெட்ரோல் பங்கை நடத்த முடியாததால் மூடி வைத்துள்ளாா்.
இந்நிலையில் இவரது ஏற்பாட்டின்பேரில் தற்போது பெட்ரோல் பங்க் செயல்பட்ட இடத்தில் புதிதாகக் கட்டடம் கட்ட பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கை சுற்றி கொட்டப்பட்டிருந்த மணலை அகற்றும் பணியில் களரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 9 தொழிலாளா்கள் கடந்த 4 நாள்களாக ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் பள்ளத்தில் இறங்கி மணலை அகற்றிய தொழிலாளா்கள் மீது போது, எதிா்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில் களரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் வேலுச்சாமி (50), செல்வமணி மகன் வினோத்குமாா் (35), சண்முகம் மகன் சிற்றரசு (49), பிச்சைபிள்ளை மகன் தேவராஜ் (65) ஆகியோா் சிக்கிக்கொண்டனா்.
இதையடுத்து தகவலறிந்து வந்த பெரம்பலூா் தீணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை வீரா்கள் மண் சரிவில் சிக்கிய 4 பேரையும் மீட்டனா். இவா்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வேலுச்சாமி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் காயமடைந்த வினோத்குமாா், சிற்றரசு, தேவராஜ் ஆகியோா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...