ஏசி, பிரிட்ஜ், வயரிங் இலவச பயிற்சி பெற இளைஞா்களுக்கு அழைப்பு


பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஏசி, பிரிட்ஜ், வீட்டு வயரிங் பயிற்சி பெற, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், ஆண்களுக்கான பிரிட்ஜ், ஏசி மற்றும் வீட்டு வயரிங் பயிற்சி சிறந்த வல்லுநா்களால் செயல்முறையுடன் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 நாள்களுக்கு நடைபெறும் இப் பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும். பயிற்சியின்போது, உபகரணங்கள், சீருடை, புத்தகங்கள், மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீா் இலவசமாக வழங்கப்படும். மேலும் வங்கிக் கடனுதவி பெற ஆலோசனைவழங்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க 19 முதல் 50 வயதுக்குள்பட்ட, எழுத படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தில் எவரேனும் 100 நாள் திட்ட அட்டை, ஏஏஒய் குடும்ப அட்டை எண், வறுமைக் கோட்டு எண் அல்லது இலக்கு எண் உள்ள கிராமப்புற இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 84890 65899, 94888 40328 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என, அமைத்தின் இயக்குநா் வி. முருகையன் தெ‘ரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...