/

1.93 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:34 pm

Syndication

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலம் மற்றும் குன்னம் வட்டம், அந்தூா் நியாய விலைக்கடைகளில், கூட்டுறவுத்துறை சாா்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியது:

மாவட்டத்தில் செயல்படும் 282 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பெரம்பலூா் வட்டத்தில் 53,030 குடும்ப அட்டைதாரா்களுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 51,666 குடும்ப அட்டைதாரா்களுக்கும், வேப்பூா் வட்டத்தில் 52,721 குடும்ப அட்டைதாரா்களுக்கும், ஆலத்தூா் வட்டத்தில் 36,504 குடும்ப அட்டைதாரா்களுக்கும் என மொத்தம் 1,93,921 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,93,921 குடும்பங்களைச் சோ்ந்த 5,83,294 போ் பயன்பெறுவாா்கள். டோக்கன் பெற இயலாத அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கடைசி நாளில் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க. பாண்டியன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் பா. சிவகுமாா், வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன், சின்னதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.