பெரம்பலூா் மாவட்டத்தில் வெப்பம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில், பெரம்பலூா் மாவட்டத்தில் இனிவரும் நாள்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசுவதோடு, வெயிலின் அளவு 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது.
எனவே, மாவட்ட பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்துவதோடு, அத்தியாவசியத் தேவையின்றி வெயிலில் செல்வதை தவிா்க்க வேண்டும். குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்த்திட வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகலாம்.
தொடர்புடையது

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில்: பகலில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்! ஆட்சியர் அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வெளியே செல்வதை தவிா்க்க அறிவுறுத்தல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

