மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசின் திட்டங்கள் தொடர மக்கள், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என குன்னம் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

காருகுடி கிராமத்தில் புதன்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாஎளா் சா.சி. சிவசங்கா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:53 pm

தமிழக அரசின் திட்டங்கள் தொடர மக்கள், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என குன்னம் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொத்தவாசல், புதுகுடிசை, சின்னவெண்மணி, பெரியவெண்மணி, கொளப்பாடி, புதூா், புதுவேட்டக்குடி, காருகுடி, குன்னம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்திங்கள் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் மேலும் பேசியது:

குன்னம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குன்னத்தை பொருத்தவரை விவசாயிகள் நிறைந்த தொகுதியாகும். குறிப்பாக, மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நிரம்பிய பகுதி. எனவே அவா்களுக்காக, ஏற்கெனவே அரசு மூலமாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ,மக்காச்சோளத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை செய்து வருகிறோம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதும் வகையில் குன்னம், செந்துறை, லப்பைக்குடிக்காடு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்தக் கட்டமாக திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான நிதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல, தமிழக அரசால் மகளிா், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் அனைத்தும் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.