தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா தொடக்கம்!

கரூர் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் கம்பம் திருவிழா தொடங்கியது குறித்து...

News image

கம்பம் திருவிழா. - படம் - தினமணி

Updated On :10 மே 2026, 10:38 am IST

கரூர் மாரியம்மன் கோயிலின் கம்பம் திருவிழா, கம்பம் நடுதலுடன் இன்று (மே 10) தொடங்கியது.

கரூரில் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் திருவிழா, கம்பம் நடுதலுடன் தொடங்கியது. கரூரின் காவல் தெய்வமாகவும் மழை பொழியும் தெய்வமாகவும் போற்றப்படும் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று காலை கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

முன்னதாக, மூப்பன் வகையறாக்களின் கனவில் தோன்றிய மாரியம்மன் முக்கிளை கம்பம் இருக்கும் இடத்தை தெரிவித்தார். இதை யடுத்து முக்கிளை கம்பம் இருக்கும் இடம் அறியப்பட்டு அவற்றுக்கு சிறப்பு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பின்னர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முக்கிளை கம்பம் வெட்டப்பட்டு அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பாலம்மாள் புரம் விநாயகர் கோயில் கொண்டுவரப்பட்டு இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் முக்கிளை கம்பம் பாலம்மாள் புரத்தில் இருந்து மூப்பன் வகையறாக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முக்கிளை கம்பம் செதுக்கப்பட்டு அமராவதி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், கோயில் முன் நடப்பட்டது. நீண்ட வரிசையில் பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். முக்கிளை கம்பம் நடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு, அன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் முத்துக்குமார் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருவிழாவில்  பங்கேற்ற திரளான மக்கள்.

திருவிழாவில் பங்கேற்ற திரளான மக்கள். - படம் - தினமணி

Summary

The Kambam Festival of the Karur Mariamman Temple began today (May 10) with the planting of the Kambam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.