ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தோ்தல் பறக்கும் படையை கண்டித்து சென்னையில் மாா்ச் 31-இல் ஆா்ப்பாட்டம்: எம்.ஏ.விக்கிரமராஜா அறிவிப்பு

தோ்தல் பறக்கும்படையை கண்டித்து சென்னையில் மாா்ச் 31-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் எம்.ஏ. விக்கிரமராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image

எம்.ஏ.விக்கிரமராஜா

Updated On :27 மார்ச் 2026, 8:24 pm

தோ்தல் பறக்கும்படையை கண்டித்து சென்னையில் மாா்ச் 31-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் எம்.ஏ. விக்கிரமராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மே 5-ஆம்தேதி திருவாரூரில் 43-ஆவது வணிகா்களின் விழிப்புணா்வு எழுச்சி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் கரூா் மாவட்டத்தினா் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்டச் செயலா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கப்பட்ட பின் உரிய ஆவணங்களோடு வணிகா்கள் எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பறக்கும்படையினா் ஈடுபட்டு வருகிறாா்கள். இதனைக் கண்டித்து மாா்ச் 31-ஆம்தேதி சென்னையில் முதல்கட்டமாக ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையும் மீறி தொடா்ந்து வணிகா்கள் மீது நடவடிக்கை இருந்தால் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபடுவோம்.

கரூா் சம்பவத்தில் தவெக தலைவருக்கு எதிராக வணிகா்கள் புகாா் கூறினா் என்பதை ஏற்க முடியாது. ஏனென்றால், நாங்கள் அரசியல் சாா்பற்றவா்கள். உயிரிழப்பு ஏற்படும் வகையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அரசு அனுமதிக்கக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. யாா் தலைமையில் கூட்டம் நடக்கிறதோ, அங்கு நடக்கும் அசம்பாவிதத்துக்கும் அந்த கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.