மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குளித்தலை அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறை அமலான நிலையில் கரூா் மாவட்டம் குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

News image
Updated On :16 மார்ச் 2026, 7:03 pm

தோ்தல் நடத்தை விதிமுறை அமலான நிலையில் கரூா் மாவட்டம் குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-இல் நடைபெற உள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் கரூா் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் பறக்கும்படை அலுவலா்கள், நிலையான கண்காணிப்புக் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள மருதூா் சுங்கச்சாவடியில் நிலையான கண்காணிப்புக்குழு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது திருச்சி மாவட்டம் முசிறியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி சாரதா (55) என்பவரின் கைப்பையில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவா்கள் புதுதில்லியில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்து பின்னா் குடும்பத்துடன் முசிறிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணத்துக்குரிய ஆவணம் இல்லாததால் குளித்தலை தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் சுவாதிஸ்ரீயிடம் ரூ.1. லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் ஒப்படைத்தனா். அந்தத் தொகை சாா் நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.