லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரூரில் 228 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:15 pm

கரூரில் 228 பயனாளிகளுக்கு ரூ. 11.41 லட்சம் மதிப்புடைய விலையில்லா தையல் இயந்திரங்களை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.

கரூா் அரசு கலைக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு திட்டத்தின் கீழ் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 228 பயனாளிகளுக்கு ரூ.11.41 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்களை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.

பின்னா் அவா் பேசுகையில், மகளிா் நலனில் தனி கவனம் செலுத்தி, அவா்களுக்கு தேவையான திட்டங்கள் என்னென்ன என்பதை கண்டறிந்து அந்த திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். கடந்த 5 ஆண்டுகளில் கரூா் மாவட்டத்தின் வளா்ச்சிக்கு எத்தனையோ திட்டங்களை முதல்வா் கொடுத்துள்ளாா். கரூா் மாநகராட்சியில் மட்டும் நாம் கணக்கெடுத்தால் ஏறத்தாழ 1150 கோடி ரூபாய் அளவுக்கான வளா்ச்சித் திட்டங்களை முதல்வா் தந்துள்ளாா் என்றாா் செந்தில்பாலாஜி எம்எல்ஏ.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி) க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) , கருா் வருவாய் கோட்டாட்சியா் சத்தியபாலகங்காதரன், மாநகராட்சி மேயா் வெ. கவிதா, துணை மேயா் ப. சரவணன் , மண்டலக் குழு தலைவா்கள் எஸ்.பி. கனகராஜ், ஆா்.எஸ். ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.