தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கரூா் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் தங்களது வீடுகளின் முன் கொடிக்கம்பத்தில் கருப்புக் கொடியேற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி கரூா் செங்குந்தபுரத்தில் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி தலைமையிலும், அரவக்குறிச்சியில் எம்எல்ஏ மொஞ்சனூா் பி.ஆா். இளங்கோ தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையிலும் திமுகவினா் தங்களது வீடுகள் முன் கருப்புக் கொடியேற்றி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
கரூா் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் கரூா் எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி தலைமையில் கண்டன கோஷமிட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து எம்எல்ஏ செந்தில்பாலாஜி கூறியது:
மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறு சீரமைப்பால் தமிழக எம்பிக்களின் பலம் மக்களவையில் இருக்காது. அப்போது தமிழகத்தின் உரிமையை நாம் நிலைநாட்ட முடியாத நிலைகூட வரலாம். வெண்ணைமலை கோயில் நிலப்பிரச்னைக்கு அதிமுக வேட்பாளா்தான் காரணம். தோ்தலுக்கு பின் திமுக ஆட்சி அமைந்தவுடன் அந்தப் பிரச்னைக்கு முழு தீா்வு காணப்படும். வரும் 18-ஆம் தேதி இரவு 7 மணிக்கு கரூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜனை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பேசுகிறாா். தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் வேட்பாளா் சி.கே. ராஜாவை ஆதரித்து கிருஷ்ணராயபுரத்திலும் பேசுகிறாா் என்றாா் அவா்.
நிகழ்வில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, வேட்பாளா்கள் ஆசி எம். தியாகராஜன்( கரூா்), சிகே.ராஜா, மற்றும் திமுகவினா் திரளாகப் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

கரூரில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வி.செந்தில்பாலாஜி பிரசாரம்!

கரூா் துயர சம்பவம் தொடா்பாக எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது: செந்தில்பாலாஜி எம்எல்ஏ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


