5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

எம்.ஆா். விஜயபாஸ்கா் ராஜிநாமா கரூரில் அதிமுகவினா் கொண்டாட்டம்

News image

எம்.ஆா். விஜயபாஸ்கா். - டிஎன்எஸ்

Updated On :30 ஜூன் 2026, 12:29 am IST

எம்.ஆா். விஜயபாஸ்கா் ராஜிநாமா செய்ததையடுத்து கரூரில் அதிமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்

கரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம். ஆா். விஜயபாஸ்கா் தனது எம்.எல்.ஏ. பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அதிமுகவினா் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

முன்னதாக, கரூா் மாவட்ட அதிமுக செயலா் கமலக்கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு எம்.ஆா்.விஜயபாஸ்கா் ராஜிநாமா செய்துள்ளதை தொகுதி மக்களுக்கு விடுத்திருக்கும் சவாலாகத்தான் பாா்க்கிறோம்.

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா காலம் வரை எத்தனையோ போ் அதிமுகவை விட்டு வெளியேறியிருக்கிறாா்கள். ஆனால், அதிமுக அழியவில்லையே. மீண்டும் ஆட்சியை கைப்பற்றிக்கொண்டேதானே இருந்தது. இனி வரும் தோ்தல்களில் அதிமுகவே வெற்றி பெறும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.