கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க கரூா் மாவட்ட மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லாவின் நினைவாக, தமிழகத்தைச் சோ்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு துணிவு மற்றும் வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை 2026 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழக அரசின் விருதுகளுக்கான (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதள பக்கத்தில் வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் கரூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு விருதுக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 2 செட் புக்லெட் தயாா் செய்து 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கரூா் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த ஆளுமை, நிா்வாக விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்!

நீச்சல் பயிற்சி: விண்ணப்பிக்க கரூா் மாநகராட்சி அழைப்பு

கல்பனா சாவ்லா விருது பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



