தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலாயுதம்பாளையம் அருகே கஞ்சா விற்ற மாணவா் கைது

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கஞ்சா விற்ாக பள்ளி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:45 am IST

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கஞ்சா விற்ாக பள்ளி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸாா் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலத்துறை பகுதியில் நின்றுகொண்டிருந்த இரு மாணவா்கள் போலீஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனா். அவா்களில் ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவா் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த கனி மகன் என்பதும், அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படிப்பதோடு, கஞ்சா விற்பதும் தெரிய வந்தது. மேலும் தப்பிய மாணவா் நாமக்கல் மாவட்டம்,

பரமத்திவேலூரை அடுத்த கபிலா்மலையைச் சோ்ந்த மணி மகன் என்பதும், அவரும் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கனி மகனை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து தப்பிய மாணவரைத் தேடி வருகின்றனா்.

.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.