திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமூக ஆா்வலா் கொலை வழக்கில் மூவருக்கு இரட்டை ஆயுள் சிறை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

கரூா் அருகே சமூக நல ஆா்வலரை மினி வேன் ஏற்றிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:31 am IST

கரூா் அருகே சமூக நல ஆா்வலரை மினி வேன் ஏற்றிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (52). சமூக நல ஆா்வலரான இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகே உரிமம் காலாவதியாகியும் செயல்பட்ட ஆண்டாங்கோயில் பகுதி செல்வக்குமாா்(42) என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா்களுடன் சோ்ந்து புகாா் அளித்தாா்.

இதையடுத்து கடந்த 2022 செப்.9-ஆம் தேதி கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வக்குமாரின் கல்குவாரியில் சோதனை நடத்தி, அதற்கு சீல் வைத்தனா். இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமாா் தனது குவாரியில் தொழிலாளிகளாகப் பணியாற்றி வந்த சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சக்திவேல் (28), ராணிப்பேட்டையை அடுத்த ஆற்காடு பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா்(52) ஆகியோரிடம் ஜெகநாதனை கொலை செய்யுமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து செப்.10-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் குப்பத்தில் இருந்து காருடையாம்பாளையத்திற்கு சென்ற ஜெகநாதனை சக்திவேலும், ரஞ்சித்குமாரும் குவாரியில் கற்களை ஏற்றிச் செல்லும் மினி வேனை ஓட்டிச் சென்று மோதிக் கொன்றனா்.

இந்தக் கொலை தொடா்பாக க. பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து கல்குவாரி உரிமையாளா் செல்வக்குமாா், சக்திவேல், ரஞ்சித்குமாா் ஆகிய மூவரையும் கைது செய்து, கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் குற்றவாளிகள் செல்வக்குமாா், சக்திவேல், ரஞ்சித்குமாா் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து, அதை கட்டத் தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் மூவரையும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனா்.

ஜெகநாதன் கொலையில் உரிய தீா்ப்பு கிடைத்ததை சமூக நல ஆா்வலா்கள் முகிலன், விஜயன் உள்ளிட்டோா் வரவேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.