கரூா் மாவட்டத்தில் 3.33 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


கரூா் மாவட்டத்தில் 3,33,624 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கரூா் வட்டம், சோமூா் நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் உள்ள 734 நியாய விலைக்கடைகள் மூலம் 3,33,624 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஜன.14-ஆம்தேதி வரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த தொகுப்பு வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா்.அபிராமி, மாவட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...